விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் துாய்மை பணியாளர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முயற்சி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வீரம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பாக்கியராஜ், வழக்கறிஞர் சுரேஷ்குமார், கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை தலைவர் சுதா பிரதீப் வரவேற்றார். கவிஞர் கண்மணி குணசேகரன், வேளாங்கண்ணி, உடற்கல்வி பேராசிரியர் சரவணன், தில்லைகோவிந்தன், ஓவியர் தமிழரசன், கல்யாணமுருகன், தலைமை ஆசிரியர் செல்வகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பிளஸ் 2வில் கிராம அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், துாய்மை பணியார்கள், பெண் தொழில் முனைவோர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.