செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில் 2021-2022ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு பல்கலைக்கழக மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
தாளாளர் ரங்கபூபதி, செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜன், சசிகுமார், செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் நந்தா பாய், சதீஷ்குமார், சர்தாஜ், பார்வதி, சரவணபவன் கலந்து கொண்டனர்.