வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக கவர்னர் ரவிக்கு தி.மு.க., பேச்சாளர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது கவர்னர் மாளிகை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
![]()
|
தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்திய போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் உரை நிகழ்த்திய போது நடந்த கூச்சல் மற்றும் குழப்பம் காரணமாக கவர்னர் ரவி கூட்டத்தின் இடையே வெளியேறினார். மேலும் சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கவர்னர் ரவிக்கு தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்துள்ளார். அவர் கவர்னரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார், கவர்னர் குறித்து அவர் கூறியதாவது, ‛ கவர்னர் ரவி உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம். ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் கவர்னரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை சொல்லி தானே பதவி ஏற்றார்' இவ்வாறு அவர் கூறினார்.
இடையிடையே அவர் பேசிய சில வார்த்தைகளை இங்கே குறிப்பிட முடியாது. அவ்வளவு அநாகரிகமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
இதையடுத்து ராஜ்பவன் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‛ கவர்னர் ரவி குறித்து தி.மு.க., பேச்சாளர் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார்., அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் அவர் மீது இந்தியன் பீனல் கோடு 124 மற்றும் 1870ன் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.' இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement