திருமாவளவன் மீதான வழக்கின் விசாரணை நிலை என்ன?

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான, கொலை முயற்சி வழக்கின் விசாரணை நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர், நந்தம்பாக்கம் போலீசில் அளித்த புகாரில், 'விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்க, கட்சி
விடுதலை சிறுத்தை, திருமாவளவன், கொலை, உயர் நீதிமன்றம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான, கொலை முயற்சி வழக்கின் விசாரணை நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர், நந்தம்பாக்கம் போலீசில் அளித்த புகாரில், 'விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்க, கட்சி அலுவலகத்துக்கு சென்றேன்.

'அங்கு இருந்த வீரப்பன் என்பவர் உள்ளிட்ட 10 பேர் என்னை தாக்கினர். 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு, திருமாவளவன்தான் காரணம்' என கூறியிருந்தார். 2011 மே மாதம், இந்த புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக, கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் இவ்வழக்கு, நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து, வேளச்சேரி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.


latest tamil news

அரசியல் அழுத்தம் காரணமாக, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை; 11 ஆண்டுகளாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வேதா அருண் நாகராஜன் மனு தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதி சந்திரசேகரன் முன், விசாரணைக்கு வந்தது. நந்தம்பாக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, வேளச்சேரி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டதால், வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க அவகாசம் அளிக்கும்படி, அரசு வழக்கறிஞர் கோரினார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (13)

DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-ஜன-202301:52:41 IST Report Abuse
DARMHAR திருமா ஒரு குருமா.
Rate this:
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
14-ஜன-202319:19:53 IST Report Abuse
Jaykumar Dharmarajan சமீக காலங்களில் திரு.திருமாவளவன் அவர்கள் முக்கியமாக இந்துக்கள் மனது மிகவும் புண்படும்படி பேசிவருகிறார். முக்கியமாக, நம் கோவில்கள், அதில் உள்ள சிற்பங்கள், நமது கலாச்சாரம்-முக்கியமாக சனாதன தர்மம் இவைகளைப் பற்றி மிகவும் அருவருக்கத் தக்க வகையில் பேசிவருகிறார். இப்படிப் பேசுவதை தடுக்கும் வ்ழியிலும் அவரைக் கண்டிக்கும் வழியிலும் நம் சட்டத்தில் ஏதாவது ஒரு வழியிருந்தால்- அவர் தண்டிக்கப் பட வேண்டும். அப்படி செய்தால், அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்
Rate this:
Cancel
இசக்கிமுத்து,தூத்துக்குடி ஆளுநர் டெல்லி போயிட்டார்னு உறுதியா தெரிஞ்சுகிட்டு ராஜ்பவன்ல யாரை எதிர்த்து போராட அங்க போனீங்க சீட்டா பாய்ஸ்? இதுக்கு பேர்தான் ஆளே இல்லாத ரோட்ல ஹாரன் அடிக்கிறதா?ஃபன்னி பெல்லோஸ்.😄
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X