கே.கே.நகர், கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ராகேஷ், 30. இவர், தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக உள்ளார்.
இவரது மனைவி யோக லட்சுமி, 30. இருவரும், கல்லுாரியில் படிக்கும்போது, காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் ராகேஷ் வேலைக்கு சென்றார். அப்போது, வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து, மர்மமான முறையில் யோகலட்சுமி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த கே.கே.நகர் போலீசார், யோகலட்சுமியின் உடலை கைப்பற்றி, அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிக்கின்றனர்.