கரூர்: கரூர் அருகே, திருமா நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சேதமடைந்துள்ள சாக்கடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன. இதை அப்புறப்படுத்தகோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைக்காலங்களில் மழைநீருடன் சேர்ந்து சாலையில் வெளியேறி வருகிறது. எனவே, சாக்கடை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, வாய்க்காலை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.