சில வரி செய்திகள்: தர்மபுரி மாவட்டம்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
வெவ்வேறு விபத்தில் இருவர் பலிஓசூர்: பாகலுார் அருகே நடந்த வெவ்வேறு விபத்தில் இருவர் பலியாகினர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, கிருஷ்ணன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன், 44; கொத்தனார். இவரும், ஜோதிபட்டியை சேர்ந்த கொத்தனார் சகாதேவன், 50, என்பவரும், நேற்று முன்தினம் காலை, 9:15 மணிக்கு, ஓசூர் - பாகலுார் சாலையில் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர். தின்னப்பள்ளி அருகே சென்ற போது,

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி


ஓசூர்: பாகலுார் அருகே நடந்த வெவ்வேறு விபத்தில் இருவர் பலியாகினர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, கிருஷ்ணன் கோட்டை பகுதியை சேர்ந்தவர்

சரவணன், 44; கொத்தனார். இவரும், ஜோதிபட்டியை சேர்ந்த கொத்தனார் சகாதேவன், 50, என்பவரும், நேற்று முன்தினம் காலை, 9:15 மணிக்கு, ஓசூர் - பாகலுார் சாலையில் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர். தின்னப்பள்ளி அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த தனியார் நிறுவன பஸ், பைக் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பலியானார்.


சகாதேவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓசூர் தாலுகா, பெலத்துார் ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேஷ், 55. கடந்த, 7ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, மாலுார் - பாகலுார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார்.

அப்போது அவ்வழியாக வந்த ஹோண்டா யூனிகார்ன் பைக் மோதி படுகாயமடைந்த அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இரு விபத்து குறித்தும், பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.



வழக்கில் ஆஜராகாத வாலிபர் கைது


ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, வழக்கில் ஆஜராகாமல் இருந்த வாலிபருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, சொப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 27. இவர் மீது கடந்த, 2017 ல் அடிதடி வழக்கு ஒன்று, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சக்திவேல் இருந்து வந்தார். இதனால் கடந்த டிச., 21ல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.



மனைவி மாயம் கணவர் புகார்


பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அடுத்த மடதஹள்ளியை சேர்ந்தவர் பழனிச்சாமி ,31. இவருக்கும் மொரசுப்பட்டியை சேர்ந்த சவுந்தர்யா,28,வுக்கும், 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இது வரை குழந்தை இல்லை. இந்நிலையில் ஓசூரில் கூலி வேலை செய்து வந்த பழனிச்சாமி, கடந்த, 11ம் தேதி மடதஹள்ளிக்கு வந்தார். அங்கு மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.



2 குழந்தைகளுடன் இளம் பெண் மாயம்


காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம்,31; லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி பிருந்தா, 29. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவன், மனைவிக்குள் சொந்தமாக லாரி வாங்குவது தொடர்பாக சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டது.


பின்னர் செல்வம் வழக்கம் போல் லாரி டிரைவராக பொங்களூர் சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மெபைலில் கணவரை தொடர்பு கொண்ட பிருந்தா, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி விட்டு சென்றார். ஊர் திருபிய செல்வம், மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததால், உறவினர் மற்றும் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து, செல்வம் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X