தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், சமத்துவபுரங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி பஞ்.,ல் பொங்கலை முன்னிட்டு நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தெருக்கூத்து நாடக கலைஞர்கள் லட்சுமணன், கிருஷ்ணன் குழுவினர் சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கல், சூரியனை குறித்து விரிவாக விளக்கினர்.
*கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பி.டி.ஓ., சிவக்குமார், துணை பி.டி.ஓ.,க்கள் முகிலன், உமாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
*கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவியர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். *ஊத்தங்கரை அடுத்த, வீராச்சிகுப்பம் பஞ்., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. பஞ்., தலைவர் செல்விராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
*தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
* அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
* பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில் உள்ள 19 பஞ்.,களிலும் பி.டி.ஓ.,க்கள் அருள்மொழி தேவன்,அனந்தராம விஜயரங்கன் ஆகியோர் மேற்பார்வையில் சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.