பாப்பிரெட்டிப்பட்டி,: பொம்மிடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ்.,தேசிய பசுமை படை,பாரத சாரண இயக்கம் சார்பில் புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம், பொ.மல்லாபுரத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் போது சுற்று சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என மாணவர்கள் கோஷமிட்டனர்.
பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. திட்ட அலுவலர்கள் தமிழ்தென்றல், குப்புசாமி, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.