தர்மபுரி: தர்மபுரியில், பொங்கல் பண்டிகையொட்டி வாசலில் கோமிடும் கலர் கோல பொடி விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
தை முதல் நாளில், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது வீடு, வயல், வாசல் என பல்வேறு இடங்களில் பானை வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மக்கள் கரும்பு, வெல்லம், புதிய துணிகள், வாசலில் கோலமிட பயன்படுத்தும் பல்வேறு கலர் பொடிகளை வாங்க குவிந்து வருகின்றனர். மேலும், தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பல வண்ண கலர் பொடிகளை, நகர் மற்றும் கிராம பகுதியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். விற்பனை ஜோராக நடந்து வருகிறது.