காரிமங்கலம்,: தர்மபுரி, காரிமங்கலம் தாலுகா பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும், பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. இக்கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம், விவேகானந்தர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ், இளைஞர் தின நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.