கரூர்: வெள்ளியணை சமத்துவ புரத்தில் நேற்று நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்றார்.
விழாவில், பெரியவர்கள், குழந்தைகள், துாய்மை காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓட்டப்பந்தயம், மியூசிக் சேர், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சென்னை ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள் அன்புமணி நீலாகுமார், வெள்ளியணை பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில், பெண் ஊழியர்கள், பொங்கல் வைத்து கொண்டாடினர். பிறகு, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.