பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
குளித்தலை: தரகம்பட்டி அருகே, பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தரகம்பட்டியை அடுத்த, குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி, 45, கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை 8:00 மணியளவில் வீட்டில் இருந்தபோது, அதே ஊரை சேர்ந்த அஜித், 25, சிவாஜி வீட்டின் முன்பு நின்று கொண்டு தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிவாஜியின் மனைவி, இது குறித்து கேட்டதற்கு அவரை அஜித், குச்சியால் தாக்கினார். இதுகுறித்து சிவாஜி கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ., கனகராஜ் வழக்குப் பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.
கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, கணவர் இறந்த துக்கத்தில், பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்த, வீராசாமி மனைவி மஞ்சுளா, 36; வீராசாமி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால், மஞ்சுளா விரக்தியில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், வீட்டில் அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மஞ்சுளாவின் மகன் ஹரிபிரகாஷ், 18; கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பொது இடத்தில் தகராறுஇருதரப்பினர் மீது வழக்கு
தகவல் அறிந்த மாயனுார் போலீசார், அங்கு சென்று, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்தனர். இருப்பினும், அவர்கள் தகராறில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவர் மீதும், மாயனுார் எஸ்.ஐ., காளிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.