தாராபுரம்: தாராபுரத்தில் சாலையோரங்களில் கரும்பு விற்பனை களை கட்டியது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாராபுரத்தில் வசந்தா ரோடு, பழைய நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரங்களில் கரும்பு கடைகள் நேற்று போடப்பட்டன. சுற்று வட்டாரத்தில் மட்டுமின்றி, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதிகளில் இருந்தும் கரும்புகளை வரவழைத்து விற்பனை நடந்தது. ஒரு ஜோடி கரும்பு, 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்பனையானது.
Advertisement