புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி போலீசார், மாதம்பாளையம் சாலையில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது டூவீலரில் வந்த ஒருவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பு.புளியம்பட்டி செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார், 42, என்பதும் டூவீலரில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சா, ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். சுரேஷ்குமாரை கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.