தமிழர் திருநாளான பொங்கல் ஸ்பெஷலாக 6 வகை காய்கறி சேர்த்த பட்டி குழம்பு வைப்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டிக் குழம்பு ஊருக்கு ஊர் மாறுபடும். துவரம் பருப்பு, காரட், உருளைக்கிழங்கு சேர்க்காமல் வெறும் அவரைப் புருப்பு, பரங்கிக்காய் சேர்த்து வைக்கப்படும் குழும்பு அனேக ஊர்களில் செய்யப்படுகிறது
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் - ஒரு துண்டு
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 100கிராம்
அவரைக்காய் - 100கிராம்
கேரட் - 50 கிராம்
உருளை - 50கிராம்
பச்சை அவரை பருப்பு- 50கிராம்
துவரம் பருப்பு - 1கப்
தக்காளி - 2
புளி - எலுமிச்சை பழ அளவு
சின்னவெங்காயம் - 15
எண்ணெய்- 2ஸ்பூன்
செய்முறை
முதலில் துவரம் பருப்பை அலசி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிப் பருப்பு மற்றும் தக்காளியைச் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
|
அடுத்ததாக கரைத்து வைத்த புளித்தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5சின்ன வெங்காயம், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய இரண்டையும், ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய்த் துருவல்சேர்த்து மசாலா பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்தவுடன், பருப்பு கலவையை சேர்த்துக் கிளற வேண்டும். பிறகு 2 ஸ்பூன் சாம்பார் பொடி, அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புச் சேர்த்து 10நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாகக் கொத்தமல்லி இலைச் சேர்த்து இறக்கினால் 6 வகை காய்கறிகள் சேர்ந்த பட்டிக் குழம்பு தாயார்.