திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராம உதவியாளர் பணிக்கு அரசியல் தலையீடு இல்லாமல் அந்தந்த மாவட்ட கலெக்டர்களே நேர்மையாக தேர்வு நடத்தி பணி நியமனம் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 53 உதவியாளர் (தலையாரி ) பணியிடங்களுக்கு அண்மையில் நேர்முகத் தேர்வு நடந்தது. ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர் என தி.மு.க,வினருக்கு தான் வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கூறியிருந்தார். ஆனால், அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையாகவும் வெளிப்படுத் தன்மையாகவும் தேர்வினை நடத்தி தேர்வானவர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டனர்.
தென்காசியில் கலெக்டர் ஆகாஷ், திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, தூத்துக்குடியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் இந்த பட்டியல்களை அறிவித்தனர்.

இதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காரையாறு வனப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின பெண் அகிலாவிற்கு சிங்கம்பட்டியில் உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ருதிக்கு மேலகரந்தையில் உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.