டேராடூன்: படைவீரர்களின் நலனுக்காக பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு பிரத்யேக துறை உள்ளது. அவர்கள் நாட்டின் சொத்து என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஆயுதப்படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அவர் பேசியவதாவது: படைவீரர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்துள்ளது. படை வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தின் காட்சிகள் என் கண் முன்னே இருக்கின்றன. அவர்களின் துணிச்சலான இதயங்களை நான் பார்க்கும் போது, என் தலை வணங்குகிறது.

படை வீரர்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து அதன் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரித்து உள்ளனர். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க, தேவைப்படும் போதெல்லாம், படை வீரர்கள் தங்கள் அசாத்திய தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
படைவீரர்களின் நலனுக்காக பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு பிரத்யேக துறை உள்ளது. அவர்கள் நாட்டின் சொத்து. அவர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம், மருத்துவம் மற்றும் பிற வசதிகள் உங்களுக்கு மரியாதை காட்டுவதற்கான சிறிய வழிகள் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement