படஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதற்கேற்ப ரூ.10ஆயிரம் விலையில் சூப்பரான 5ஜி போனை சீனாவில் அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி53 மாடலான இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரையில், மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போனில் 6.5இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.720 X 1,600 பிக்கல்களுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் ஆக்டோ கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 480+SoC சிப்செட் மூலம் ஆண்ட்ராய்டு 13 இல் இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜை பொருத்த வரையில், 4ஜிபி+ 128ஜிபி மற்றும் 8ஜிபி+128 ஜிபி வேரியண்டுகளில் வருகிறது.
![]()
|
5000எம்எச்ஏ திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 5ஜி பேண்ட்கள், மற்றும் பிற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.விலையை பொருத்தவரையில் 4ஜிபி+ 128ஜிபி ரூ.10,500-க்கும் மற்றும் 8ஜிபி+128 ஜிபி ரூ.13,000-க்கும் இந்திய ரூபாயின் மதிப்பில் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதே விலையில் இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.