திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்

Added : ஜன 14, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் கவர்னர் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பாக அண்ணாமலை அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலாரான கவர்னரை, தவறான வார்த்தைகளால் விமர்சித்த சிவாஜி
திமுக, பேச்சாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,

சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் கவர்னர் குறித்து அவதூறாக பேசினார்.


இது தொடர்பாக அண்ணாமலை அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலாரான கவர்னரை, தவறான வார்த்தைகளால் விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவரது கருத்துக்கள், கருத்துச் சுதந்திரம் என்று கருதப்படக் கூடாது. தமிழக முதல்வரை பற்றி அதே இழிவான வார்த்தைகள் பேசப்பட்டால், கவல்துறை அதை கருத்துச் சுதந்திரமாகக் கருதாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.


நீண்ட காலமாக, தி.மு.க.வினர், பொது மேடைகளை, தரக்குறைவான பேச்சுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போல் நிகழாமல் தடுக்க, கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.


இதுபோன்ற அவதூறான பேச்சுகளைக் கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறையின் செயலற்ற தன்மை, அந்த அவதூறுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக இருக்கிறது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

விருமாண்டி - மதுரை,இந்தியா
15-ஜன-202301:34:04 IST Report Abuse
விருமாண்டி அண்ணாமலையே போற்றி போற்றி
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
14-ஜன-202316:34:43 IST Report Abuse
BALU நம்ம கையில என்ன சார் இருக்குது.அதெல்லாம் கிடக்கட்டும் விடுங்க சார்.வாங்க சார் ஜாலியா மகாபலிபுரம் ரோட்டுல ஜாலியா சைக்கிள் ஓட்டி செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போட்டா சும்மா லைக்ஸ் பறக்கும்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
14-ஜன-202316:12:37 IST Report Abuse
Godyes அரசாங்க அலுவலகங்களில் மேலே கருப்பு கீழே சிகப்பு கொடி பறப்பதால் கட்சி அலுவலகங்களாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X