பிரkஞ்ச அழகிப் போட்டியில் கலந்துகொண்டு பரிசைத் தட்டிச் செல்வது மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பெண்கள் ஒவ்வொருவரது கனவு. இந்தியாவிலும் தற்போது அழகிப் போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் தற்போது மாடலிங் துறையில் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, இன்று நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்கிறார். இதில் வித்தியாசமான உடை அணிந்து வந்த திவிதா ராய் மற்றும் அன்னா சுயங்கம் ஆகியோர் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸில் 71-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியின் தேசிய ஆடை அணியும் போட்டியில் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிந்து வருவர். இந்தியா சார்பில் திவிதா ராய், இறக்கைகளுடன் கூடிய தங்க நிற லெஹங்கா அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
![]()
|
வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் செல்வத்தின் சின்னமாக இந்தியா விளங்குகிறது. திவிதா ராய் அணிந்த உடை இந்தியாவை தங்கப் பறவையாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை ஆடை வடிவமைப்பாளர் அபிஷேக் ஷர்மா வடிவமைத்துள்ளார். இந்த உடையின் மூலமாக நம் நாட்டின் முழு வளமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காட்ட விரும்பினேன் என அபிஷேக் சர்மா மகிழ்ச்சிபடத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயதான ஆனா சுயங்கம் என்ற நடிகை, 2022-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஷங்கரின் 'பாய்ஸ்' பட பாடலில் ஜெனிலியா அணிந்துள்ள ஆடைபோல ஆனா, குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆடையை அணிந்து ஒய்யாரமாக நடந்துவந்தார். மேடையில் வித்தியாசமான உடையை அணிந்து வந்ததால் பலரின் கவனத்தை அவர் ஈர்த்தார். இதனைத்தொடர்ந்து அந்த உடை அணிந்து வந்ததற்கான காரணத்தையும் விளக்கினார். அந்த காரணம் பலரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
ஆனா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டார். இவைகுறித்து அவர் பதிவையும் இட்டுள்ளார்.
'குப்பை சேகரிக்கும் தந்தைக்கும், தெருவை சுத்தம் செய்யும் தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான்..! குப்பை என் வாழ்வில் புதிதல்ல, குப்பைகளுடனும் மறுசுழற்சி செய்யும் பொருட்களுடனும் வாழ்ந்தவள் நான். சிறுவயது முதலே என்னைச் சுற்றியிருந்த பொருள்களைக் கொண்டு செய்த உடையை நான் அணிந்து வந்துள்ளேன். பலரால் மதிப்பிழந்ததாகக் கருதப்பட்டு தூக்கியெறியப்பட்ட பொருட்கள் அவற்றின் மதிப்பையும் அழகையும் இப்போது எனக்குள் இருந்து வெளிகாட்டுகின்றன. இந்த உடையின் அழகைப் பார்த்தவர்களுக்கும், என் பேச்சைக் கேட்டவர்களுக்கும் நன்றி..!'
இவ்வாறு ஆனா குறிப்பிட்டுள்ளார். இது இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.
Advertisement