புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில், உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு மிதந்தது. இது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு., மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்யவும் இந்த வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement