இன்ஜினியரிங் மற்றும் கருவூலங்கள் துறை பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு பணியாளர் தேர்வாணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளில், 830 காலியிடங்களுக்கு, கடந்த ஆண்டு ஜூலையில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 39 ஆயிரம் பேர் பங்கேற்றதில், 2,575 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை பணிகளில், 29 காலியிடங்களுக்கு, கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு நடந்தது. இதில், 282 பேர் பங்கேற்றனர். அவர்களில், 39 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.