சீனாவில் கோவிட் கோரத்தாண்டவம்: 35 நாளில் 60 ஆயிரம் பேர் பலி| China Reports Nearly 60,000 Covid-Related Deaths In 35 Days | Dinamalar

சீனாவில் கோவிட் கோரத்தாண்டவம்: 35 நாளில் 60 ஆயிரம் பேர் பலி

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (3) | |
பீஜிங்: சீனாவில் கோவிட் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் சுகாதார நிர்வாக பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹி கூறுகையில், கடந்த டிச.,8 முதல் ஜன.,12 வரை மட்டும் கோவிட் காரணமாக, மருத்துவமனைகளில் 59,938 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும்
China, Covid, Deaths, சீனா, கோவிட், கொரோனா, மரணம், பலி, உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்: சீனாவில் கோவிட் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் சுகாதார நிர்வாக பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹி கூறுகையில், கடந்த டிச.,8 முதல் ஜன.,12 வரை மட்டும் கோவிட் காரணமாக, மருத்துவமனைகளில் 59,938 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் என்பதால், கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும்.

உயிரிழந்தவர்களில் 5,503 பேர் கோவிட் காரணமாக சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டு உயிரிழந்தவர்கள். வேறு உடல் பிரச்னைகளோடு கோவிட் பாதிப்பு ஏற்பட்டதால் 54,435 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
latest tamil news

கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கான தனது கொள்கையை சீனா கடந்த மாதம் தளர்த்தியது. இதனால், அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்தது. ஆனால், அது குறித்த தகவலை சீனா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X