கிரேட்டர் நொய்டா:'வால்வோ - ஐச்சர்' கூட்டு நிறுவனம், முழுக்க முழுக்க சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தி, 5 'ஐச்சர்' வர்த்தக ரக வாகனங்களையும், 2 'வால்வோ' கன ரக வாகனங்களையும், 'ஆட்டோ எக்ஸ்போ'வில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாய்ப்பு
இதுகுறித்து, வால்வோ ஐச்சர் நிறுவன நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான வினோத் அகர்வால் கூறியதாவது:
வால்வோ குழுமம் மற்றும் ஐச்சர் நிறுவனக் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் முதல் 'பி.எஸ்., 6' தொழில்நுட்பத்தை உருவாக்கிஉள்ளது.
மின்சார பேருந்துகள் நடைமுறையில் செயல்பட்டு வரும் நிலையில், மாற்று எரிவாயுக்களான எல்.என்.ஜி., சி.என்.ஜி., எத்தனால் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை கார்பன் இல்லா சுற்றுச்சூழலை ஏற்படுத்த அத்தியாவசியமாகி உள்ளது.
போக்குவரத்தில் துரிதமான நிலைத்தன்மையைக் கொண்டுவர, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறந்த உருமாற்றத்தை இந்திய வர்த்தக வாகனத் துறையில் செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வால்வோ நிறுவனத்தின் வணிகத் தலைவரான தினகர் கூறியதாவது:
வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, கனரக வாகனங்களை தொடர்ந்து தயாரிக்க நினைக்கிறோம்.
தரமான தயாரிப்பு
இதன்வாயிலாக அதிக சந்தைப் பங்கை பெறுவது மட்டுமல்லாமல், நல்ல லாபத்தையும் பெற்று, மாசுபாட்டையும் குறைக்க முடியும்.
'எக்ஸ்பிரஸ்' தளவாடங்கள் பிரிவில், எப்.எம்., டிராக்டர் லாரி வாயிலாக, சிறந்த, தரமான தயாரிப்புகளை வழங்குவதோடு, எல்.என்.ஜி., தொழில்நுட்பத்தைக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை தருவது, கார்பன் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்குவது ஆகியவற்றையும் நோக்கிப் பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எப்.எம். எல்.என்.ஜி., 420 4X2 டிராக்டர் லாரிவால்வோ 9,600 சொகுசுப் பேருந்து
ஐச்சர் வாகனங்கள்
இன்டர்சிட்டி மின்சார பைஸ்2049 மின்சார 4.9 டி. ஜி.வி.டபுள்யு வாகனம்பிரோ 8,055 எல்.எம்.ஜி., / சி.என்.ஜி., லாரிஹைட்ரஜன் ஐ.சி.இ., லாரிஹைட்ரஜன் பியூயல் செல் லாரி