ஜனாதிபதிக்கு கவர்னர் தகவல்

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (36) | |
Advertisement
தமிழக சட்டசபையில் கவர்னர் வெளிநடப்பு செய்த விவகாரத்தை வைத்து அவரை நீக்க வேண்டும் என, தி.மு.க.,வின் ஐவர் குழு சமீபத்தில் ஜனாதிபதியை புதுடில்லியில் சந்தித்து மனு அளித்துள்ளது. ஆனால், சட்டசபையில் உண்மையில் என்ன நடந்தது; தான் வெளிநடப்பு செய்ய என்ன காரணம் என்பதை, இந்த சம்பவம் நடந்த உடனேயே கவர்னர் ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தொலைபேசி வாயிலாக

தமிழக சட்டசபையில் கவர்னர் வெளிநடப்பு செய்த விவகாரத்தை வைத்து அவரை நீக்க வேண்டும் என, தி.மு.க.,வின் ஐவர் குழு சமீபத்தில் ஜனாதிபதியை புதுடில்லியில் சந்தித்து மனு அளித்துள்ளது.



latest tamil news


ஆனால், சட்டசபையில் உண்மையில் என்ன நடந்தது; தான் வெளிநடப்பு செய்ய என்ன காரணம் என்பதை, இந்த சம்பவம் நடந்த உடனேயே கவர்னர் ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துவிட்டாராம்.

இதைத் தவிர, கடிதம் வாயிலாகவும் தன் தரப்பு விளக்கத்தை ஜனாதிபதிக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அவர் தெரிவித்துவிட்டாராம். 'தமிழக கவர்னர், தன் 18 பக்க அறிக்கையில் பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்' என்கின்றனர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தி.மு.க., அரசு எழுதிக் கொடுத்ததை, ஏன் தன் உரையிலிருந்து நீக்கினேன் என்பதை, கவர்னர் ஆதாரங்களோடு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளாராம்.

'தமிழகத்தில் வன்முறை அதிகரித்து விட்டது என்பதால் தான், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற வரியை தவிர்த்துவிட்டேன்' என கவர்னர் தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறாராம்.


latest tamil news


கவர்னர், ஜனாதிபதிக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அளித்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் விரைவில் வெளிவரும் எனவும் சொல்கின்றனர் அதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (36)

Arunachalam - Chennai,இந்தியா
17-ஜன-202301:02:35 IST Report Abuse
Arunachalam Central Government has enormous powers State cannot function on its own .....the present dmk chief stalin follows the doctrine of Seeman NTK full credits to Seeman... Seeman knows the consequences and dare to face but Stalin has no leader to back him
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
16-ஜன-202312:20:14 IST Report Abuse
Arachi முதலில் கவர்னர் தைரியம் இருந்திருந்தால் அப்ரூவல் கொடுத்திருக்கக் கூடாது. இரண்டாவது தவறு தேசிய கீதம் இசைக்கும் அவையுனுள் இருக்காமல் வெளியேறியது. இது தேசத்தை அவமதிக்கும் செயல். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்ல்ல அரசியல் பேசுவதற்கு. தமிழக மக்கள் என்று பேச்சு வழக்கில் எல்லோரும் சொல்லுவது தான். ஆனால் அரசு ஆணைகளிலும் கோப்புகளிலும் ஆவணங்களிலும் தமிழ் நாடு என்றுதான் இருக்க வேண்டும். மொத்தத்தில் இவர் தமிழ் நாட்டிற்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை மற்றும் அது இவரது வேலையுமில்லை
Rate this:
Cancel
Kamatchi - Chennai,இந்தியா
16-ஜன-202311:48:02 IST Report Abuse
Kamatchi கவர்னர், தமிழகம்-தமிழ்நாடு எனப்பேசியது அவரது சொந்தக் கருத்து, பேச்சுரிமை சார்ந்தது அதற்காக அவர் பேசும்போது சபையில் கூட்டணிக் கட்சிகள் கூச்சலிட்டது சபையின் உரிமை மீறல்.கவர்னரை வைத்துக்கொண்டே அவர்மீது கண்டனத்தீர்மானம் வாசித்தது அநாகரிகம். எனவேதான் வெளியேறினார். ஆனால் திமுகவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தவறை மறைக்கவே முயல்கின்றனர். காலம் ஒருநாள் பதில் சொல்லும். ஏஜென்ட், கூரியர், மயிராண்டி, கொலைசெய்வோம், காஷ்மீருக்கு மாற்றி தீவிரவாதிகளை அனுப்புவோம் என்பதெல்லாம் திமுகவின் அராஜகப் போக்கு.
Rate this:
சோழநாடன் - Tiruchirappalli,இந்தியா
19-ஜன-202318:25:11 IST Report Abuse
சோழநாடன்கவர்னருக்குச் சொந்த கருத்து என்ற ஒன்று இருக்கவே முடியாது. இருந்தால் பதவி விலகி சொல்லாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X