தமிழக சட்டசபையில் கவர்னர் வெளிநடப்பு செய்த விவகாரத்தை வைத்து அவரை நீக்க வேண்டும் என, தி.மு.க.,வின் ஐவர் குழு சமீபத்தில் ஜனாதிபதியை புதுடில்லியில் சந்தித்து மனு அளித்துள்ளது.
![]()
|
ஆனால், சட்டசபையில் உண்மையில் என்ன நடந்தது; தான் வெளிநடப்பு செய்ய என்ன காரணம் என்பதை, இந்த சம்பவம் நடந்த உடனேயே கவர்னர் ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துவிட்டாராம்.
இதைத் தவிர, கடிதம் வாயிலாகவும் தன் தரப்பு விளக்கத்தை ஜனாதிபதிக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அவர் தெரிவித்துவிட்டாராம். 'தமிழக கவர்னர், தன் 18 பக்க அறிக்கையில் பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்' என்கின்றனர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள்.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தி.மு.க., அரசு எழுதிக் கொடுத்ததை, ஏன் தன் உரையிலிருந்து நீக்கினேன் என்பதை, கவர்னர் ஆதாரங்களோடு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளாராம்.
'தமிழகத்தில் வன்முறை அதிகரித்து விட்டது என்பதால் தான், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற வரியை தவிர்த்துவிட்டேன்' என கவர்னர் தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறாராம்.
![]()
|
கவர்னர், ஜனாதிபதிக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அளித்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் விரைவில் வெளிவரும் எனவும் சொல்கின்றனர் அதிகாரிகள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement