திரிபுரா தேர்தல்: மா.கம்யூ.,காங்., கூட்டணி

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
அகர்தலா: விரைவில் நடைபெற உள்ள திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் மா.கம்யூ., காங்., கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளன. திரிபுரா மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் வெளியிட உள்ளது. இதனைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு

அகர்தலா: விரைவில் நடைபெற உள்ள திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் மா.கம்யூ., காங்., கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளன.



latest tamil news


திரிபுரா மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் வெளியிட உள்ளது. இதனைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மா.கம்யூ.,கட்சியை அகற்றி விட்டு பா.ஜ., ஆட்சி அமைந்தது.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் பறி கொடுத்த கட்சியின் செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக காங்கிரஸ் மற்றும் மா.கம்யூ., முயற்சி செய்து வருகிறது. இதற்காக வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடி வு செய்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அஜய்குமார் மற்றும் மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி சந்தித்து பேசி உள்ளனர். தொடர்ந்து ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில் தற்போது பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. சீட் எண்ணிக்கை முக்கியமல்ல. அதே நேரத்தில் பா.ஜ.,வின் தோல்வியே முக்கிய நோக்கம் என கூறினார்.


latest tamil news


அதே நேரத்தில் பா.ஜ.,வின் மாநில தலைவர் ரஜீப் பட்டாச்சார்ஜி கூறுகையில் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூ., இடையே ரகசிய கூட்டணி நிலவி வந்தது. காங்கிரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு காரணமாக மா.கம்யூ.,கடந்த 25 ஆண்டுகளாக மாநிலத்தில் செய்து வந்தது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஜன-202316:58:34 IST Report Abuse
Rafi இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்தாடுவதை தடுப்பதற்காக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இணைத்திருப்பதாக எடுத்து கொள்ளலாம்.
Rate this:
Cancel
14-ஜன-202321:57:42 IST Report Abuse
ஆரூர் ரங் பத்தாண்டுகளுக்கு முன் இதே. திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஆனால் பாஜகவிற்கு பல மாவட்டங்களில் ஒரு தொண்டர் கூட கிடையாது . இப்போது அங்கு ஏகபோக பிஜெபி கட்சி . மிரண்டு போன இரண்டு எதிரிகளும் ஒன்று🙃 சேர்ந்து மண்ணை கவ்வப்போகிறார்கள்.
Rate this:
Cancel
14-ஜன-202321:55:41 IST Report Abuse
ஆரூர் ரங் கேரளாவில் செயற்கையாக எதிர்ப்பு😋 வரும். நமக்கு சிரிப்பு வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X