அகர்தலா: விரைவில் நடைபெற உள்ள திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் மா.கம்யூ., காங்., கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளன.
![]()
|
திரிபுரா மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் வெளியிட உள்ளது. இதனைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மா.கம்யூ.,கட்சியை அகற்றி விட்டு பா.ஜ., ஆட்சி அமைந்தது.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் பறி கொடுத்த கட்சியின் செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக காங்கிரஸ் மற்றும் மா.கம்யூ., முயற்சி செய்து வருகிறது. இதற்காக வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடி வு செய்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அஜய்குமார் மற்றும் மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி சந்தித்து பேசி உள்ளனர். தொடர்ந்து ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில் தற்போது பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. சீட் எண்ணிக்கை முக்கியமல்ல. அதே நேரத்தில் பா.ஜ.,வின் தோல்வியே முக்கிய நோக்கம் என கூறினார்.
![]()
|
அதே நேரத்தில் பா.ஜ.,வின் மாநில தலைவர் ரஜீப் பட்டாச்சார்ஜி கூறுகையில் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூ., இடையே ரகசிய கூட்டணி நிலவி வந்தது. காங்கிரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு காரணமாக மா.கம்யூ.,கடந்த 25 ஆண்டுகளாக மாநிலத்தில் செய்து வந்தது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement