நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த, மண்பாண்ட தயாரிப்பு கைவினை கலைஞர் முருகன்: எங்கள் குடும்பத்தினரின் குலத்தொழிலே, செங்கல் மற்றும் மண்பானைகள் தயாரிப்பு தான்.
செங்கல் சூளையால் மாசு பிரச்னை ஏற்பட, ஆற்றிலும், குளத்திலும் கிடைக்கும் வண்டல் மண் மற்றும் சிவப்பு மணலை கொண்டு, சின்னஞ்சிறிய மண் சட்டிகள் செய்யத் துவங்கினோம்.
இப்போது, எங்களின் தயாரிப்புக்கு, உலக அளவில் ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன.
கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன், ஜெர்மனியைச் சேர்ந்த மூன்று பேர், 'பூ ஜாடி, பூந்தொட்டி செய்து தர முடியுமா?' என்று கேட்டனர். அதை தயார் செய்து கொடுக்க, அதன்பின்,௧.௫ லட்சம் ரூபாய்க்கான 'ஆர்டர்'கள் கொடுத்து திகைக்க வைத்தனர்.
இதன்பின்னரும், விதவிதமான மண்பாண்ட பொருட்கள் செய்து தர, எங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன.
நாங்கள் தயாரிக்கும்சட்டி, கிண்ணம் மற்றும்பிரியாணி, 'தம்' போடுவதற்கான உருளைச் சட்டிகள் போன்றவை 'சப்ளை' செய்ய, அரபு நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன.
'யூஸ் அண்டு த்ரோ' பொருட்களையும் தயாரித்து தருவதால், அவற்றுக்கும் அதிக வரவேற்பு உள்ளது.
நாங்கள் தயாரிக்கும் தரமான உருளைச்சட்டி, ௪௦ ரூபாய் மட்டுமே என்பதால், மலேஷியா, துபாய், கத்தார், ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில், அவை பிரபலமாகி உள்ளன.
பிலிப்பைன்ஸ், நேபாளம், துருக்கி, சீனா போன்ற நாடுகளிலும், எங்களின் தயாரிப்புகள் விற்பனையில் உள்ளன.
'கோவை ட்ரீம் இண்டியா பவுண்டேஷன்' அமைப்பை சேர்ந்தவர்கள், கடந்த ஆண்டு எங்களை தொடர்பு கொண்டு, கோவையில்நடந்த சுதந்திர தின கண்காட்சிக்காக, உணவு வகைகள் எளிதில் கெடாத, ௭௫ ஆயிரம் மண், 'ஹாட்பாக்ஸ்'கள் செய்து தர ஆர்டர் கொடுத்தனர்.
எங்களின் தயாரிப்பு ஹாட்பாக்ஸ்கள், மாடர்ன் ஹாட்பாக்ஸ்களுக்கு சமமானவை; அவை, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளன. விரைவில் நடக்க இருக்கும், 'ஜி - 20' மாநாட்டுக்காக, இரண்டு லட்சம் மண் ஹாட்பாக்ஸ்கள் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளோம்.
நெல்லை தாமிரபரணிஆற்றில், வண்டல் மண்ணிற்கு கீழே அடர் சிவப்பு மண் கிடைக்கிறது.
அந்த மண்ணில் தயார் செய்யப்படும் மண்பாண்டங்கள், ரத்தச் சிவப்பு நிறத்தில் இருப்பதால், அவை, அனைவரையும் கவர்கின்றன. மண்பாண்டங்களின் தரத்திற்கும், விற்பனை அதிகரிப்புக்கும் முக்கிய காரணமே, தாமிரபரணி நதி தான்.
'இந்திய வரலாறும், நாகரிகமும், தாமிரபரணி எனும் பொருநை ஆற்றங்கரையிலிருந்து எழுதப்பட வேண்டியது...' என்ற குரல்கள்,ஆவண ஆதாரத்துடன், நெல்லை இலக்கிய திருவிழாவில்விண்ணை முட்டி எழுந்தன.
அதை மேலும் உறுதிப்படுத்துகின்றன... தாமிரபரணி மண்பாண்ட பொருட்கள்!
உழைப்பை நம்புங்கள்; எல்லாம் மாறும்!
'அடையார் ஆனந்த பவன்'
நிறுவன இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா: வாழ்க்கை, 'பிசினஸ்' இரண்டையுமே
அப்பாவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம். எங்கள் குடும்பத்தில், நான்,
அண்ணன் வெங்கடேஷ் என இரண்டு பேர்.
அப்பா பெங்களூரில் இனிப்பு கடை ஒன்றை திறந்து, எங்கள் நிறுவனத்தின் துவக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
அப்பா
அந்தக் கடையை தனியாக கவனித்துக் கொள்ள சிரமப்படுவதாக அம்மா கூறியதால்,
படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அவருக்கு உதவச் சென்றோம். அக்கடைக்கு
நல்ல வரவேற்பு இருந்ததால், 1979ல் சென்னை வண்ணாரப்பேட்டையில், ஸ்ரீ ஆனந்த
பவன் என்ற கடையை துவக்கினோம்.
பின், இரண்டாவது கிளையை சென்னை
அடையாறில் திறக்கும் போதே, 'இது, ஸ்வீட் கடையாக மட்டும் இருக்கக் கூடாது.
நிச்சயம் பல கிளைகள் கொண்ட நிறுவனமாக மாற வேண்டும்' என்பதை இலக்காக
நிர்ணயித்தோம்.
வயதான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, பல உணவுகளை அறிமுகம் செய்யும் முடிவுக்கு வந்தோம்.
அதை,
அடையார் ஆனந்தபவன் நிர்வாகத்தின் பெயரில் விற்காமல், வேறு பெயரில் விற்க
வேண்டும் என்று முடிவெடுத்து, 'ஏ2பி - ஏ ஸ்கொயர் பி' என்ற பெயரில்,
புதுச்சேரியில் முதல் உணவுக் கடையை திறந்தோம்.
கிளைகள் துவங்குவதில்
நாங்கள் செய்த யூகம் தான், எங்களது மிகப் பெரிய வெற்றியின் ஆரம்பம்.
'டிராவல்' செய்பவர்களுக்கு வசதியாக, எங்களுடைய நிறுவனத்தை புறவழி
சாலைகளிலும் அமைத்தோம்.
எல்லா பிசினசிலும், ஏற்ற இறக்கங்கள்
இருக்கும். கொரோனா நேரத்தில், மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்கும்
நிலைக்கு தள்ளப்பட்டோம்; மீளவே முடியாத சரிவு நிலை தான்.
ஆனால்,
எங்கள் விற்பனை பிரிவினரே, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று உணவுகளை,
'டெலிவரி' செய்யும் திட்டத்தை கொண்டு வந்து மீண்டெழுந்தோம். 'பிசினசில்
ரிஸ்க்' எடுக்கலாம் தவறில்லை; ஆனால், அதற்குரிய அனுபவம் நிச்சயம் வேண்டும்.
அடுத்தபடியாக,
உணவுகளை சமைத்து வீடு வீடாக கொண்டு செல்லும் திட்டமும், 2,000 கிளைகள்
துவங்க வேண்டும் என்ற இலக்கும் வைத்திருக்கிறோம். நான் பள்ளியில் படித்த
போது, பள்ளியில் எடுத்த குரூப் போட்டோ வாங்கக் கூட காசில்லை.
அந்தச்
சூழலில், அம்மா என்னை அழைத்து, காசு இல்லை என்று சொல்லாமல், 'பள்ளிக்
கூடத்தில் எடுக்குற போட்டோ நமக்கு எதுக்கு... நீ, உன் திறமையால் பெரிய ஆளா
வந்தா, உன் கூட எல்லாரும் போட்டோ எடுப்பாங்க'ன்னு சொன்னாங்க.
அவர் அன்று கூறியது, இன்று நிஜமாகி இருக்கிறது. உழைப்பை மட்டும் நம்புங்கள்; எல்லாம் மாறும்!