பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் குமார் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
பி.டி.ஓ., விஜயகுமார் வரவேற்றார். துணைத் தலைவி அபிராமி, ஏ. பி.டி.ஓ., மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்ட விவாதம் வருமாறு:
ஜோதிபாசு (இ.கம்யூ.,): மலைப்பாளையம் ரோடு, ஆண்டிபாளையம் -கடகந்திருடி பாளையம் ரோடு, பருவாக்கரைப்பாளையம்- மீனாட்சி ரைஸ் மில் வரையுள்ள ரோடு பழுதடைந்துள்ளது. அத்திக்கடவு குடிநீர் சரியாக வருவதில்லை. ஆண்டி பாளையத்தில் ரேஷன் கடை வேண்டும்.
குமார் (தலைவர்): முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு குடிநீர் எவ்வளவு கிடைக்கிறது என, 15 நாட்களுக்கு அளவீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இ.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தவிர மற்றவர்கள் யாரும் கூட்டத்தில் வாய் திறக்கவில்லை.