வெள்ளகோவில்:வெள்ளகோவில் ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை, கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு செய்தார்.
வெள்ளகோவில் ஒன்றியம் லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வீடு; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 4.84 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் லக்கமநாயக்கன்பட்டி அரசுநடுநிலைப்பள்ளி பராமரிப்பு பணி; 5.62 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் அரசு தொடக்கப்பள்ளி பராமரிப்பு பணி.
15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 4.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி என, மொத்தம் 17.31 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. புதிய வளர்ச்சி பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கவேண்டும் என, துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
வெள்ளகோவில் பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமார், எத்திராஜ், உதவி பொறியாளர் செந்தில் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.