திருப்பூர்:திருப்பூரில் உள்ள சார்ப் டெக் இன்டியா நிறுவனம், சாப்ட்புளோ டையிங் மெஷின்கள் மற்றும் பலுான் பேடிங் மெஷின்கள் என, பலவற்றை தயாரித்து வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தினர் கூறியதாவது:
கடந்த, 1993ம் ஆண்டு முதல் எங்களது நிறுவனம் திருப்பூர் தொழில் துறையினருக்கு தேவையான சாப்ட் புளோடையிங் மெஷின்களை விலை குறைவாகவும், இறக்குமதி மெஷின்களுக்கு இணையான தரம் நிறைந்ததாகவும் வழங்கி வருகிறது.
ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்று வளர்ந்து உள்ளது. டையிங் மெஷின் தயாரிப்பில், நாங்கள், 25 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளோம். எங்களது சாப்ட் புளோடையிங் மெஷின்களில் குறைவான தண்ணீரில் தரமான டையிங் தொழில் நுட்பம், சரியான அளவில் வாட்டர் பிரஸ்சர், ஸ்டீம் பிரஸ்சர் மற்றும் பல சிறப்பு அம்சங்களோடு வடிவமைக்கப்படுகின்றது.
உலக தரம் வாய்ந்த மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. பல நவீன தொழில் நுட்ப வசதிகளோடு பலுான் பேடிங் மெஷின்களையும் சர்வீஸ் வசதிகளையும் வழங்குகிறோம். விற்பனைக்கு பின், சர்வீஸ் இன்ஜினியர் மூலம் சர்வீஸ் செய்து தர வசதி உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 93630-11603, 91500-01053 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.