திருப்பூர்:திருப்பூர், கோர்ட் வீதியில் உள்ள மாநகர போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் நேற்று பொங்கல் திருவிழா முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் போலீஸ் குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் பல்வேறு போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.இன்று இரண்டாவது நாளாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைத்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளது.