கோவை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில் நடந்த கலை திருவிழா போட்டிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் தனித்தனியாக, மூன்று பிரிவுகளாக பங்கேற்றனர்.
மொத்தம் 228 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி அளவில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 867 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
வட்டார அளவிலான போட்டிகளில், 37 ஆயிரத்து 741 பேர் முதலிடம் பிடித்ததோடு, 12 ஆயிரத்து 364 மாணவ, மாணவியர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்றனர்.
மாவட்ட அளவில், 8 ஆயிரத்து 39 பேர் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், 68 மாணவர்கள், 129 மாணவிகள், மாநில அளவிலான போட்டிகளில், முதல் மூன்று பரிசுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக பரிசுகள் பெற்றதால், முதல் பரிசுக்கான சான்றிதழ் கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு சேலம் மாவட்டத்துக்கும், மூன்றாம் பரிசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது.