கோவை:மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் நடந்துவருகின்றன.
மாநகராட்சி வடக்கு மண்டலம், 26வது வார்டு, பீளமேடு பயனியர் மில் சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், 10வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஏழு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
19வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணி நடந்து வருகின்றன. பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மேயர் கல்பனா அறிவுறுத்தியுள்ளார்.