விருதுநகர் --ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி பொங்கல் விழாவில் முதல்வர் வெங்கடேஸ்வரன் துணை முதல்வர் சிவராம மூர்த்தி தலைமை வகித்தனர். பேராசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கொண்டாடினர். உறியடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஜெகநாத், ஸ்ரீ லட்சுமி செய்தனர்.
*சத்திரப்பட்டி அருகே மொட்டமலை ஸ்ரீ பாலகிருஷ்ணா அறிவியல் கல்லுாரி பொங்கல் விழாவிற்கு முதல்வர் அருண் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தாளாளர் மாடசாமி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
* ராஜபாளையம் நகராட்சியில் தலைவர் பவித்ரா, கமிஷனர் பார்த்தசாரதி, துணை தலைவர் கல்பனா, நகராட்சி அலுவலர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
* இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் ராஜபாளையம் அருகே அழகாபுரியில் பொங்கல் விழா நடந்தது. மேற்பார்வையாளர் வேணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர்.பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி., கலை , அறிவியல் கல்லுாரியில் பொங்கல், கிராமிய விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் கண்ணன், செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தனர். கல்வியியல், கலை கல்லுாரி முதல்வர்கள் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* சாத்தூர் எஸ். ஆர்.என். எம் கல்லூரியில் தைப்பொங்கல் விழா நடந்தது . மாணவ, மாணவியர் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், இணைந்து கல்லூரி வழிபாட்டு திடலில் பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவர், மாணவிகள் தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வேஷ்டி, சேலை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். சர்க்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
* சாத்தூர் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லூரி தலைவர் ராஜு தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். மாணவிகள் முளைப்பாரி வளர்த்து பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் வைத்தனர் அனைத்து துறை மாணவர்களும் வேஷ்டி உடையில் விழாவில் கலந்து கொண்டனர். தேவராட்டம், ஒயிலாட்டம் ,ஒயிலாட்டம் சிலம்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், உறியடி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
* ஸ்ரீஹரா வித்யா மந்திர் சி பி எஸ் இ பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி தலைவர் ராஜு தலைமை வகித்தார். தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாக பொறுப்பாளர் மாரீஸ்வரன் வரவேற்றார். கணித ஆசிரியை ஜெயதுர்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நால்வகை பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். கலை நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது இரட்டை மாடு வண்டி பூட்டி வந்து மாணவர்கள் பள்ளியை சுற்றி வலம் வந்தனர். விழாவில் ஆசிரியர்கள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
* சாத்தூர் மேட்டமலை பி. எஸ் .என். எல். பி. எட்., கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லூரி தலைவர் ராஜு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபா ராஜு முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
*ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் பொங்கல்விழா கொண்டாட்டம், தாளாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். பள்ளியில் ஒன்பது வகை பொங்கல் வைத்தும், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.