விருதுநகர்,-விருதுநகர் ஒய்ஸ்மென் சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செந்திக்குமார நாடார், மீனாட்சிம்மாள் நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஏ.பி., சங்கரலிங்க நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒய்ஸ்மென் சங்கத் தலைவர் வாழவந்தான் தலைமை வகித்தார். செயலாளர் விக்னேஷ்குமார், ஞானமணி முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் ரமேஷ், கண்ணன், கலைசேகரன், தமிழரசி, மணிமேகலை பங்கேற்றனர்.