அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
தோணுகாலை சேர்ந்த நவீன்குமார் தேவாங்கர் கலை கல்லூரியில் பி.ஏ., 3 ம் ஆண்டு படிக்கிறார். இவர் தானாக முன்வந்து ரத்த தானம் வழங்கினார். நான் பலருடைய உதவியால் தான் கல்லூரி வரை படித்து வருகின்றேன்.
என்னால் முடிந்தது ரத்த தானம் செய்வது என நினைத்து முதல்முறையாக ரத்த தானம் செய்துள்ளேன் என மாணவர் கூறினார். மாணவரை சங்க நிர்வாகிகள் இன்னாசி ராஜா, சரவணசெல்வன், சங்கரநாராயணன், பாலாஜி, குணவதி பாராட்டினர்.