தாய், மகனுக்கு அடி
சிவகாசி: புலிப்பாறைப்பட்டி கொங்கன்குளம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் 28. இவருக்கும் இவரது சகோதரர் சப்பானிக்கும் பன்றி மேய்ப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. சப்பானி அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன் மாரிஸ்வரன் ஆகியோர் மாரியப்பன், அவரது அம்மா லட்சுமியை தகாத வார்த்தை பேசி, ஈட்டி கம்பால் அடித்து காயப்படுத்தினர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் தீப்பிடித்து நாசம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த ஒரு கார் கிருஷ்ணன்கோவில் அருகில் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமடைந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மோகன், இவர் தனது நண்பருடன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு காரில் வந்துள்ளனர். காலை 10:40 மணிக்கு கிருஷ்ணன் கோவில் கண் மருத்துவமனை அருகில் வரும்போது கார் தீப்பிடித்து எரிந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குருசாமி மற்றும் வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் நாசமானது. கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் மூவர் காயம்
சிவகாசி: தேனி மாவட்டம் கண்டமநல்லுார் கோவிந்த நகரத்தை சேர்ந்தவர் பாலாஜி 28. இவர், சிவகாசியில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு ஜக்கம்மாள் கோயில் அருகே சென்ற போது சிவகாசி சரஸ்வதி பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கற்பக ராஜா 25, ஓட்டி வந்த டூ வீலர் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். டவுன்போலீசார் விசாரிக்கின்றனர்.
* வெம்பக்கோட்டை பேர் நாயக்கன்பட்டி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் ஆண்டியப்பன் 77. தனது சைக்கிளில் வெம்பக்கோட்டை ரோட்டில் சென்ற போது மகேந்திரன் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம் மோசடி
சிவகாசி: செங்கமல நாச்சியார்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஞான கிளிராஜ் 33. இவர் பராசக்தி காலனியை சேர்ந்த செல்வக்குமாருக்கு சொந்தமான வீட்டை ரூ. 27 லட்சத்திற்கு விலை பேசி ரூ. 3.50 லட்சம் முன்பனமாக கொடுத்தார். வீட்டை வாங்க முடியாத சூழ்நிலையில் செல்வக்குமாரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதில் அவர் ரூ. 60 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீத பணம் தரவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் இளைஞர் பலி
சிவகாசி: வெம்பக்கோட்டை கீழதாயில்பட்டி பாலம்மாள் காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன் 23. இவர் தனது டூவீலரில் அவரது நண்பர் தாயில்பட்டி பச்சையாபுரத்தைச் சேர்ந் மோகன்ராஜை 23, ஏற்றிக்கொண்டு கொங்கலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது ரோட்டின் ஓரத்தில் நின்றிருந்த வேன் மீது மோதியதில் இறந்தார். மோகன்ராஜ் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.