நரிக்குடி,-நரிக்குடி புத்தனேந்தலில் மக்கள் பங்களிப்புடன், டெல்லி பிரதான் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.12 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சின்ன, பெரிய கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.
மானூரில் மக்கள் பங்களிப்புடன் கண்மாய் தூர்வாரும் பணி, அகத்தாகுளத்தில் பசுமை விடியல் திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்ட இயக்குனர் திலகவதி, பி.டி.ஓ.,கள் ராஜசேகர், வாசுகி, ஊராட்சித் தலைவர்கள் நாகவள்ளி, சீனிவாசன், மங்களம், ராஜேந்திரன், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.