கமுதி,;கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் திரு முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் அழகப்பா பல்கலை கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.
ஊராட்சி தலைவர்கள் ராமகிருஷ்ணன், மேல்மயில் முருகன் துவக்கி வைத்தனர்.
போட்டியில் அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லூரி முதல் பரிசும், அழகப்பா கலை அறிவியல் கல்லூரி 2ம் பரிசும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரி 3ம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தொழில் அதிபர் கருப்புசாமி செய்யாத்துரை பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் சிவராம கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.