ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை குறைந்துள்ளதால் வேளாண் துறையினர் வழிகாட்டுதலின் படி வறட்சி மேலாண்மை தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும், என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது:
வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியால் நெற்பயிர்கள் கருகியது. இவற்றை வறட்சியில் இருந்து பாதுகாக்க ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் 4 கிலோ பொட்டாசியம் உரத்தை கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். நுண்ணுயிர் பாக்டீரியா 250 முதல் 400 மி.லி கலவையை 200 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
மேலும் நானோ யுரியா 500 மில்லி திரவத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை நேரத்தில் தெளிக்கலாம். பருத்தியில் ஏக்கருக்கு 2.5 கிலோ டி.ஏ.என்.யு., பருத்தி ப்ளஸ்சை 200 லிட்டார் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் மொட்டுக்கள் உதிர்வதை குறைத்து காய்கள் பிடிப்பதற்கும், வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கும்.
வறட்சியை தாங்கி வளர பினானோபிக்ஸ் 4 மில்லியை 4.5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலர், உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.