முதுகுளத்தூர்,--முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
மாற்றுத்திறனாளி அலுவலக பொறுப்பாளர் கனகராஜ் தலைமை வகித்தார். புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குதல், டாக்டரிடம் ஆலோசனை பெற்று உபகரணங்கள் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் சங்க தலைவர் ராஜேஷ், பொறுப்பாளர் மயில்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.