ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 742 அரிசி பெறும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஜன.9 முதல் ரூ.1000, தலா ஒரு கிலோ பச்சரி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
ஜன.12 வரை பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்த மாவட்டங்கள் பட்டியலில் சேலம் முதலிடம், திருப்பத்துார் இரண்டாம் இடத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் 3,79, 485பேருக்கு (அதாவது 96 சதவீதம்) வழங்கப்பட்டு மூன்றாமிடத்தில் உள்ளது.
ஒரிரு நாட்களில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு முழுமையாக வழங்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.