திருப்புல்லாணி,--திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கால தாமதம் செய்வதை கண்டித்தும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்காததையும், கலெக்டருக்கு மனு அளித்த பின் நடவடிக்கைக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அலுவலர்களை கண்டித்து வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்புல்லாணி பஸ் ஸ்டாப் அருகே நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். விருது நகர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பாளர் செல்வம் நன்றி கூறினார்.