பரமக்குடி,--பரமக்குடி அருகே உலகநாதபுரம் அற்புத குழந்தை ஏசு சர்ச்சில் தேர் பவனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சர்ச்சில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அற்புத குழந்தை இயேசு பவனி வந்தார். அப்போது சர்ச் முன்பு உள்ள கொடி மரத்தில் குழந்தை இயேசு கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடந்தது. ஜன.21ல் சிறப்பு திருப்பலி, 22 ல் இறை உணவு விழா நடக்கிறது.
தினமும் காலை, மாலை சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. பாதிரியார்கள் சிங்கராயர், சபரி முத்து, பங்கு வட்டார அதிபர் திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்கு பணியாளர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.