சென்னை:மாவட்டங்களுக்கு இடையிலான டி - 20 கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
டி.என்.சி.ஏ., என்படும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.,ராஜன் கோப்பைக்கான 'டி - 20' கிரிக்கெட் போட்டி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து போட்டிகளின் முடிவில், இறுதிப் போட்டிக்கு, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற திருவள்ளூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் களமிறங்கிய திருவள்ளூர் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஆறு விக்கெட் இழந்து, 177 ரன்களை குவித்தது.
அணியின் வீரர் ஹேமந்த்குமார் 44 பந்துகளுக்கு, நான்கு சிக்சர், ஆறு பவுண்டரி உட்பட 73 ரன்களை அடித்து அசத்தினார். எதிர் அணியின் வீரர் அருண் திறமையாக பந்து வீசி, நான்கு விக்கெட்களை எடுத்து, 26 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
அடுத்து, 178 ரன்கள் இலக்கில் களமிறங்கிய செங்கை அணி, 20 ஓவர்கள் விளையாடி, ஏழு விக்கெட் இழந்து, 164 ரன்களை எட்டியது. அணியின் வீரர் ஆண்ட்ரூ, 48 பந்துகளில், இரண்டு சிக்சர், மூன்று பவுண்டரிகளுடன், 63 ரன்களை கொடுத்தார். இறுதியில், நான்கு விக்கெட் வித்தியசத்தில் திருவள்ளூர் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.