மண்டல பால் பேட்மின்டன் எம்.ஓ.பி., வைஷ்ணவ் சாம்பியன்

Added : ஜன 15, 2023 | |
Advertisement
சென்னை:சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை, 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரித்து, இருபாலருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'ஏ' மண்டலத்தின் மகளிருக்கான பால் பேட்மின்டன் போட்டி, பல்வேறு கல்லுாரிகளில் நடந்தது.இந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., - எஸ்.ஐ.இ.டி., - எம்.ஓ.பி., கல்லுாரிகள் உட்பட மொத்தம் 10 மகளிர் கல்லுாரி அணிகள்
 மண்டல பால் பேட்மின்டன் எம்.ஓ.பி., வைஷ்ணவ் சாம்பியன்

சென்னை:சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை, 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரித்து, இருபாலருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'ஏ' மண்டலத்தின் மகளிருக்கான பால் பேட்மின்டன் போட்டி, பல்வேறு கல்லுாரிகளில் நடந்தது.

இந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., - எஸ்.ஐ.இ.டி., - எம்.ஓ.பி., கல்லுாரிகள் உட்பட மொத்தம் 10 மகளிர் கல்லுாரி அணிகள் பங்கேற்று மோதின. போட்டிகள் 'நாக் - அவுட் 'முறையில் நடந்தன.

இறுதிப் போட்டியில், ஜெபாஸ் மகளிர் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் மற்றும் ஜெபாஸ் கல்லுாரிகள் மோதின. இரண்டு செட்களிலும், 35 - 30, 36 - 34 என்ற புள்ளிக் கணக்கில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.

இரண்டாம் இடத்தை, ஜெபாஸ் அணியும், மூன்றாம் இடத்தை எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரியும் கைப்பற்றின. வெற்றி பெற்ற அணியை, எம்.ஓ.பி., கல்லுாரியின் முதல்வர் லலிதா பாலாகிருஷ்ணன் பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X