ராமநாதபுரம்,--ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீசாய் ராம் நிறுவனம் சார்பில் ரோபோடிக் பொருட்காட்சி நடக்கிறது. கடந்த மாதம் துவங்கிய கண்காட்சியை ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,காதர்பாட்சா முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தினமும் மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரையில் நடக்கும் பொருட்காட்சியில் குழந்தைகளுக்கான பறவைகள் சரணாலயம், ஜெயன்ட்வீல், டிராகன், கொலம்பஸ், டிஸ்கோ, ெஹலிகாப்டர் ராட்டினங்கள், ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, பேய்வீடு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.
வீட்டுக்கு தேவையான பொருட்கள், அழகு சாதனம், பேன்சி, விளையாட்டு பொருட்கள் விற்பனை அரங்குகள் மற்றும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது, என ஸ்ரீ சாய்ராம் நிறுவன உரிமையாளர் உதயகுமார் தெரிவித்தார்.